பவானி ஆற்று வெள்ளப்பெருக்கால் மூழ்கி வரும் உயர்மட்ட பாலம் : போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் லிங்காபுரம்-காந்தவயல் பகுதியினை இணைக்கும் உயர்மட்ட பாலம் நீரில் மூழ்கி வருவதால் நாளை முதல் போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலையில் மாற்று வழியை ஏற்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் லிங்காபுரம்-காந்தவயல் பகுதியினை இணைக்கும் உயர்மட்ட பாலம் நீரில் மூழ்கி வருவதால் நாளை முதல் போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலையில் மாற்று வழியை ஏற்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அனை நடப்பாண்டில் பருவமழை காரணமாக மூன்றாவது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் பில்லூர் அனையில் இருந்து கடந்த ஒரு மாதகாலமாக தொடர்ச்சியாக உபரி நீரானது சீரான இடைவேளையில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக பில்லூர் அணையில் இருந்து அதிகபட்சமாக 70,000 கன அடி தண்ணீர் வரை பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. அத்துடன் பவானியின் கிளை நதிகளான மாயாறு, கந்தையாறு போன்ற ஆறுகளிலும் தண்ணீர் அதிக அளவில் வந்தது. பில்லூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் பவானி ஆற்றின் வழியே சென்று பவானி சாகர் அணையை அடையும். அத்துடன் மாயாறு ,கந்தையாறு ஆகியவற்றில் வரும் தண்ணீரும் பவானி சாகர் அணையை அடையும், இதனால் பவானி சாகர் அணை மளமளவென உயரத்துவங்கியதால் தற்போது அந்த அணையின் நீர மட்டம் 96 அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அதன் நீர் தேக்கம் அதிகரித்து கொண்டே வந்ததால், கடந்த இரு தினங்களில் மட்டும் ஜந்து அடிக்கும் மேல் தண்ணீர் உயர்ந்து லிங்காபுரம்-காந்தவயல் பகுதியினை இணைக்கும் 30 அடி உயரம் கொண்ட உயர் மட்ட பாலம் மூழ்கி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

115 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையானது தற்போது 96 அடி வரை மட்டும் தண்ணீர் உள்ளது. இந்த நிலையில், மேலும் 20 அடி தண்ணீர் வரை தேக்கம் போது, லிங்காபுரம்-காந்தவயல் பகுதியினை இணைக்கும் 30 அடி உயரம் கொண்ட உயர் மட்ட பாலத்திற்கும் மேல் 25 அடி வரை தண்ணீர் தேங்கும் என்பதால் இரு கிராமங்களை இணைக்கும் போக்குவரத்தானது முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படும். காந்தவயல், ஆலூர், உளியூர் போன்ற பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்கு அரசுத்துவக்க பள்ளிகளும் செயல்படுகின்றன. எனவே அதிகரித்து வரும் பவானி ஆற்றின் நீர் தேக்கம் காரணமாக இவர்களது பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளதுடன் அங்கிருந்து வெளியேற முடியாத சூழலுக்கு தள்ளப்படுவர். எனவே உடனடியாக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...