நீலகிரி : கோத்தகிரியில் இருந்து உதகை செல்லும் சாலை பகுதியில் மேட்டுப்பாளையத்திலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று, பேரார் பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும் பாேது சாலையின் ஓரத்தில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் 200 அடி பள்ளத்தில் விழுந்திருக்க வேண்டிய சூழலில், மரத்தில் மாேதி நின்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து உதகை செல்லும் சாலையில் பல இடங்களில் தடுப்பு சுவர் இல்லாததால் மண் அரிப்பு ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் நேரிடுவதால் நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கோத்தகிரியில் இருந்து உதகை செல்லும் சாலை பகுதியில் இன்று மேட்டுப்பாளையத்திலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசு வாகனம் பேரார் பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும் பாேது சாலையின் ஓரத்தில் நிலைதடுமாறி விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
விபத்துக்குள்ளான வாகனம் 200 அடி பள்ளத்தில் விழுந்திருக்க வேண்டிய சூழலில் மரத்தில் மாேதி நின்றது. இதன் காரணமாக மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நேரிடுவதால் உதகை முதல் கோத்தகிரி வரையிலான சாலையில் எங்கெங்கு தடுப்பு சுவர்கள் தேவைப்படுகிறதோ அப்பகுதிகளில் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.