நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ராணுவ பகுதிகளில் பிளாக் பிரிட்ஜ், பேரக்ஸ், வெலிங்டன் சின்ன வண்டி சோலை, உள்ளிட்ட பகுதிகளில் காட்டெருமைகள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் இவற்றை அடர்ந்த வனப்பகுதிகளில் விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில், சிறுத்தை, கரடி, காட்டெருமை, உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் இன்று ராணுவ பகுதிக்கு செல்லும் மயான பூமியில் 30க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வந்து சென்றன. இவை பிளாக் பிரிட்ஜ் பகுதியில் சாலைகளை கடக்கும் போது விபத்துக்கள் நேரிடும் சூழல் இருக்கிறது.
மேலும், இப்பகுதி ராணுவ பகுதி என்பதால் அடிக்கடி முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வதால் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் நடக்கும் முன் இந்த காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதியில் துரத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.