கோமியம் விரைவில் மருத்துவ பொருளாக அறிவிப்பு : மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே

கோவை : கோமியம் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் மருத்துவ பொருளாக அறிவிக்கப்பட இருப்பதாகவும், யோகா, சித்தா, யுனானி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே தெரிவித்துள்ளார்.


கோவை : கோமியம் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் மருத்துவ பொருளாக அறிவிக்கப்பட இருப்பதாகவும், யோகா, சித்தா, யுனானி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே தெரிவித்துள்ளார்.



கோவை தனியார் மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய்க்கான சிகிச்சை கருவிகளை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே இன்று துவக்கி வைத்தார். 



பின்னர் புற்று நோய்க்கு எதிரான போர் என்ற தலைப்பில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத்துறை இனை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மாணவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் பேசினார்.



அப்போது, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சர்வதேச அளவிலான சிகிச்சைகள் இந்தியாவில் கிடைக்கின்றது எனவும் நோயாளிகளை தேடி சென்று மருத்துகள் சேவை அளிக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றார். மருத்துவ சேவையில் இந்தியா சிறப்பாக திகழ வேண்டும் என பிரதமர் விரும்புவதாகவும் அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். வரும் 2025க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய சுகாதாரத்துறை முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடு முழுவதும் புதியதாக 75 மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட இருப்பதாகவும் இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என்றார். தமிழகத்தில் மதுரையில் ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டுமான பணிகள் நடை பெற்று வருகின்றது எனவும், இதே போல நாடு முழுவதும் பல இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.



மேலும், சேலம், மதுரை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்ட பின்னர் மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.கோமியம் விரைவில் மருத்துவ பொருளாக அறிவிக்கப்படும் எனவும் அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், யோகா, சித்தாயுனானி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...