நீலகிரி : கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி கேசிடி கேர் அமைப்புடன் இணைந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பணியர் பழங்குடியின மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவால் வீடுகளை இழந்து ஏற்பட்டு பெரும் பாதிப்புக்குள்ளாக்கினர். மேலும் சில மக்கள் மழையால் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர்.

இந்த நிலையில், தற்பொழுது அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கள ஆய்வின் மூலம் அறிந்து கொண்ட குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி மற்றும் கேசிடி கேர் அமைப்பு, கூடலூர் தொரப்பள்ளி மொளப்பள்ளி, நிலக்கோட்டை மேபில்டு, குந்தலாடிக் கடலக்கொல்லி போன்ற இடங்களில் வசிக்கும் 60 பணியர் பழங்குடியின குடும்பங்களுக்கு நேரடியாக அவர்களின் குடியிருப்பிற்குச் சென்று அவர்தம் உடைமைகள் நனையாமல் வைப்பதற்குரிய இரும்புப்பெட்டி, உடை, பால்பொடிமுதலான பொருட்களை அளித்தனர்.

கல்லூரியின் சமூகப் பணியியல் மற்றும் உளவியல் துறையைச் சார்ந்த மாணவர்கள் அந்த மக்களிடையே ஆலோசனை மேற்கொண்டதோடு விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஊட்டினர். இந்த நிகழ்வில் கேசிடி கேர் அமைப்பினைச் சார்ந்த திரு முரளி, ரஞ்சித், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் உதவிப்பேராசிரியர்கள் முனைவர் செ.துரைமுருகன், கோ.சுனில்ஜோகி, முதுகலை சமூகப் பணியியல் மாணவர்கள் ரூபஸ், திவாகர், கமலோஷ், முதலாமாண்டு உளவியல் துறை மாணவன் துருவன், கணிதத்துறை மாணவர் நிஷாந்த், அரசியல் அறிவியல் துறை மாணவன் வசந்த், குமரகுரு கல்லூரியின் மாணவர்கள் ஸ்ரீதர், ஹரிஷ் சுபாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.