சென்னை : ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் தொற்றுநோய் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
சென்னை : ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் தொற்றுநோய் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொற்றுநோய் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த தொற்றுநோய் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கண்காட்சியினைப் பார்வையிட்டனர்.

இந்த கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தா் சிங், மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையாளர் கா.பாஸ்கரன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் த.ந.ஹரிஹரன் பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிச்சாமி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டா் சி.என்.மகேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.