கோவை ராஜவீதியில் போலீஸ் வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை : கோவை அடுத்த ராஜவீதி தேர்நிலை திடல் அருகே மூதாட்டி மீது போலீஸ் வாகனம் மோதி பலியான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


கோவை : கோவை அடுத்த ராஜவீதி தேர்நிலை திடல் அருகே மூதாட்டி மீது போலீஸ் வாகனம் மோதி பலியான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோவை மாநகரில் நடைபெற்று வரும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்திற்காக இன்று ராஜவீதி தேர்நிலை திடல் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு காவல்துறையினரை அழைத்து செல்லும் பேருந்து, ரோந்து பணியில் இருந்தது.



இந்தப் பேருந்தானது முன் நோக்கி வரும்போது, பேருந்தின் ஒரு பகுதியிலிருந்து ஒரு மூதாட்டி பேருந்தின் முன் பகுதியை தாண்டி செல்ல முற்பட்டார். ஆனால் மூதாட்டி வருவதை கவனிக்காத பேருந்தின் ஓட்டுநர், மூதாட்டியின் மீது மோதினார். இதில் மூதாட்டி பேருந்தின் சக்கரத்தில் மாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.



இதனை தொடர்ந்து, விபத்து குறித்து பெரிய கடைவீதி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி, பேரூர் பகுதியை சேர்ந்த கலா (55)என்பது தெரியவந்துள்ளது. இந்த மூதாட்டி ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு பொறிக்கடையில் வேலை பார்த்து வந்ததும், இன்று காலை வேலைக்கு செல்ல பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...