குன்னுார் ஆற்று நீர் பயன்பாட்டிற்கு உகந்ததாக சுத்திகரிக்கப்படும் : நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி : தமிழக அரசு சார்பில் 5 கோடி நிதி பெற்று குன்னுார் ஆற்று நீர் பயன்பாட்டிற்கு உகந்ததாக சுத்திகரிக்கப்படும் என குன்னூரில் நடைபெற்ற கிளீன் குன்னூர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி : தமிழக அரசு சார்பில் 5 கோடி நிதி பெற்று குன்னுார் ஆற்று நீர் பயன்பாட்டிற்கு உகந்ததாக சுத்திகரிக்கப்படும் என குன்னூரில் நடைபெற்ற கிளீன் குன்னூர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரப் பகுதியில் ஓடும் ஆற்றில் கடந்த பல ஆண்டுகளாக இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு மிகப்பெரிய அளவிலான சுகாதார சீர்கேடு ஏற்றிருந்தது. இதனை கிளீன் குன்னூர் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தூய்மைப் படுத்தப்பட்டது. இந்த நீர் பவானி ஆற்றில் சென்று கலப்பதால் இதனை குடிநீராகவும் மற்ற பயன்பாட்டிற்காகவும் சமவெளி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனைக் கருத்தில் காெண்டு ஆற்றினை சுற்றிலும் 'கீளீன் குன்னூர்' அமைப்பு சார்பில் ஆற்றைத் தூய்மைப்படுத்தி, கழிவுகள் மற்றும் வண்டல் மண் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.



மேலும், ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, மவுண்ட்ரோடு முதல் வி.பி.தெரு வரை 398 மீட்டர் நீளத்திற்கு 7 முதல் 9 அடி உயரம் வரையிலான செயின்லிங்க், வேலி அமைக்கும் பணி மும்பையை சேர்ந்த 'இஸ்ப்ராவா ஹோம்ஸ்' நிறுவனத்தின் சார்பில் 7 லட்சம் மதிப்பிலான செயின்லீக் வேலி அமைக்கப்பட்டது. அதன் நிறைவு விழா குன்னுார் நகராட்சி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.



இந்த விழாவில் கீளீன் குன்னூர்' மற்றும் மும்பையை சேர்ந்த இஸ்ப்ராவா ஹோம்ஸ் நிறுவனத்தின் தலைவர் தர்சன்ஷா, கோத்ரெஜ் மேலாண்மை இயக்குநர் நாதிர் கோத்ரெஜ் குன்னுார் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி ராமு, சுற்றுச்சுழல் ஆர்வலர்கள்' தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...