திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராத தனியார் நிறுவன ஊழியர்களை தாக்கிய இந்து முன்னணியினர் : சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராத காரணத்தால் விநாயகர் ஊர்வலத்தின் போது தனியார் பின்னலாடை நிறுவனத்திற்குள் அத்துமீறிய இந்து முன்னணியினர் கம்பெனியை சேதப்படுத்தி ஊழியர்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


திருப்பூர் : திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராத காரணத்தால் விநாயகர் ஊர்வலத்தின் போது தனியார் பின்னலாடை நிறுவனத்திற்குள் அத்துமீறிய இந்து முன்னணியினர் கம்பெனியை சேதப்படுத்தி ஊழியர்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



திருப்பூர் அங்கேரிபாளையம் சாலை பகுதியில் சுரேஷ் என்பவர் தனியார் பின்னலாடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். அங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக அப்பகுதியை சேர்ந்த இந்து முன்னணியினர் சிலர் நன்கொடை கேட்டு சென்றுள்ளனர் உரிமையாளர் சுரேஷ் இல்லாததால் நிறுவன ஊழியர்கள் பணம் தர மறுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்து முன்னணியினர் சுரேஷிடம் பத்தாயிரம் கேட்டு வற்புறுத்தி வந்த நிலையில், சுரேஷ் பணம் கொடுக்க மறுத்துள்ளார் .

இந்நிலையில் இன்று திருப்பூர் மாநகரம் முழுவதும் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அங்கேரிபாளையம் சாலையில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்த இந்து முன்னணியினர் சிலர் அத்துமீறி சுரேஷ் அவர்களின் பின்னலாடை நிறுவனத்தில் புகுந்து காவலாளியை தாக்கியதோடு விநாயகர் சிலை கொண்டு சென்ற வாகனத்தை நிறுவனத்திற்கு அத்துமீறி கொண்டுவந்து பிரச்சினை செய்துள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட பின்னலாடை நிறுவன ஊழியர்களை அங்கிருந்த இரும்பு கம்பிகளை கொண்டு தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளை கற்களை கொண்டும் பூச்செடிகளை கொண்டும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சிவக்குமார் உட்பட 4 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நன்கொடை தர மறுத்த காரணத்தால் பின்னலாடை நிறுவனத்தில் அத்துமீறி விநாயகர் சிலையுடன் நுழைந்த இந்து முன்னணியினர் செய்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...