கோவை : சமூக நீதிக்கு எதிராக கருத்துக்களை பரப்பி பதட்டத்தை ஏற்படுத்துவதையே ஹெ.ச்.ராஜா கொள்கையாக கொணடுள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் எம்.என்.கந்தசாமி தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கடந்த 2007ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு தடையில்லா சான்றிதழ் பெற்று தர, கோடி கணக்கில் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. இதே விவகாரத்தில் சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவும் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்யப்பட்டார். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பழி வாங்கும் நோக்கில் செயல்படுவதாக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ப.சிதம்பரம் சிறையில் அடைக்கபட்டதை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டாமுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மோடி மற்றும் அமித்ஷாவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, குற்றவாளியாக சேர்க்கப்படாத ஒருவரை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது எனவும் 15 நாட்கள் விசாரனையை தொடர்ந்து 14 நாட்கள் சிறையில் பா.சிதம்பரம் அடைக்கப்பட்டது பழிவாங்கும் செயல் என்றார். இதன் தொடர்ச்சியாகவே நேற்றைய தினம் கர்நாடக முன்னாள் சிவக்குமார் கைது செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்த அவர், சி.பி.ஐயை தன்வசப்படுத்திக் கொண்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு செயல்படுவதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய பா.ஜ.கவின் ஹெ.எச்.ராஜா, இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த எம்.என்.கந்தசாமி, சமூக நீதிக்கு எதிராக கருத்துக்களை பரப்பி பதட்டத்தை ஏற்படுத்துவதையே கொள்கையாக கொண்டவர் ஹெ.ச்.ராஜா எனவும், அவருடைய கருத்துகளுக்கு பதிலளிக்க தான் விரும்பவில்லை என்று கூறினார்.