கோவையில் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ; பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் முயற்சியால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது

கோவை : காந்திபுரம் இளங்கோ நகரில் உள்ள ஒரு வீட்டில் மின் கசிவினால் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் முயற்சியால் விரைவாக அணைக்கப்பட்டது.


கோவை : காந்திபுரம் இளங்கோ நகரில் உள்ள ஒரு வீட்டில் மின் கசிவினால் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் முயற்சியால் விரைவாக அணைக்கப்பட்டது.

கோவை காந்திபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் இளங்கோ நகர் உள்ளது, இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.



இந்தநிலையில் இன்று இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஜெயா என்பவரது வீட்டில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அத்துடன் அப்பகுதி மக்கள் அனைவரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



இதை தொடர்ந்து விரைவாக வந்த தீயணைப்பு துறையினர் வீட்டின் மேற்கூரையிலேயும் உள் பகுதிகளிலேயும் பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி அணைத்தனர்.

மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினரும் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவே தீ விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.



தீ விரைவாக பரவுவதற்கு முன்பாகவே பொதுமக்களும் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் உயிர் சேதங்கள் ஏதும் இன்றி பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...