கோவை : கரும்புக்கடை பகுதியில் உள்ள பழுதான சாலைகளை அரசு அதிகாரிகளிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் " புகைப்பட போராட்டம்" என்ற நூதன போராட்டத்தை அப்பகுதி மக்கள் துவங்கியுள்ளனர்.

சமீபகாலமாக சமூக ஊடகங்கள் மக்கள் பிரச்சனைகளை அனைவரின் பார்வைக்கு கொண்டுசெல்லும் பாலமாக மாறிவருகிறது. உலக அரசியல் முதல் உள்ளூர் பிரச்சனைகள் வரை சமூக ஊடங்கங்கள் மூலமாக மக்களிடம் சென்றடைகிறது. தற்போது சமூக ஊடகங்கள் உதவியுடன் " புகைப்பட போராட்டம்" என்ற நூதன போராட்டத்தை கோவை கரும்புக்கடை பகுதி ஹேப்பி தியேட்டர் அணியினர் துவங்கியுள்ளனர்.

கோவையின் கரும்புக்கடை பகுதியில் உள்ள சாலைகள் பல வருடங்களாக சேதமடைந்துள்ளது மேலும் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாகவும், இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இப்பகுதி சாலைகள் அனைத்தும் கடந்த உள்ளாட்சி தேர்தலில் போடப்பட்டது அதன்பின் அரசு அதிகாரிகள் சாலைகளை கண்டுகொள்ளவில்லை என கூறினர்.
இதனால் "புகைப்பட போராட்டம்" என்ற நூதன போராட்டத்தின் மூலம், சேதமடைந்த சாலைகள் மற்றும் அப்பகுதி அடிப்படை வசதிகளின் நிலை குறித்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு மாவட்ட நிர்வாகம் மோசமான செயல்பாட்டினை அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லவுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்தின் செயல்பாட்டாளர் அப்துல் ஹக்கீம் கூரியதாவது; கரும்புக்கடை பகுதி பல வருடங்களாக மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகிகளால் பார்க்கப்பட்டு வருகிறது. இங்கு மிகவும் அடிப்படை வசதிகள் குறைவு குறிப்பாக சாலைகள் அனைத்தும் பல வருடங்களாக பழுதாகியுள்ளது. இந்த சாலைகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் என அனைவரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் பல சாலை விபத்துகள் இங்கு அதிகமாக நடப்பதாக கூறினார். மேலும் கடந்த சாலைகள் அனைத்தும் கடந்த உள்ளாட்சி தேர்தலில் போடப்பட்டது. அடுத்த உள்ளாட்சி தேர்தல் வந்தால்தான் சாலைகளை சரி செய்வார்களா என்ற கேள்வியினை எழுப்பினார்.
மேலும் இது குறித்து புகைப்பட போராட்டத்தை துவக்கிய அதன் ஹேப்பி தியேட்டர் அணி உறுப்பினரும், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஸ்பியர் அகமது கூறியதாவது; கரும்புக்கடை பகுதியில் முக்கிய சாலைகளாக இருக்கும் சரமேடு சாலை, பாத்திமா நகர் சாலை மற்றும் புல்லுகாடு சாலை இவை மூன்றும் மிக மோசமாக பழுதடைந்துள்ளது, உக்கடம் மேம்பாலம் வேலைகள் காரனமாக இங்கு அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. புகைப்பட போராட்டம் மக்களிடம் தீவிரம் அடையும் முன் அரசு அதிகாரிகள் சாலைகளை விரைவாக வந்து சரிசெய்து தருவார்கள் என தாம் நம்புவதாக ஸ்பியர் அகமது தெரிவித்தார்.
புகைப்பட போராட்டத்தின் சிறப்பம்சமாக சிறந்த புகைப்பட உள்ளீடுகளுக்கு டி-ஷர்ட்டினை பரிசாக ஹேப்பி தியேட்டர் அணி வழங்கவுள்ளது.