கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 148-வது பிறந்தநாள் விழா ; நினைவு மண்டபத்தில் மலர்தூவி மரியாதை

கோவை : கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 148-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை : கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 148-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என மக்களால் போற்றப்பட்ட இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் வ.உ.சிதம்பரனார். அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு செக்கு இழுத்தார். 



அவர் மறைவுக்கு பிறகு அந்த செக்கு கோவை மத்திய சிறையில் நினைவு மண்டபமாக அமைக்கப்பட்டது. இதற்க்கு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ஆண்டுதோறும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 



இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 148 -வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் உள்ள அவர் இழுத்த செக்கிற்கும், அவரது உருவப்படத்திற்கும், உருவ சிலைக்கும் பல்வேறு தரப்பினர் மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வ.உ.சிதம்பரனாரின் பற்றாளர்கள் சிதம்பரனாரின் புகழ் பொதுமக்கள் மத்தியில் எளிதாக சென்றடைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

இது குறித்து அகில இந்திய ராஜிவ் காந்தி போர்படை தெற்கு தொகுதி தலைவர் மோசஸ் கூறும் போது; வ.உ சிதம்பரனாரின் தியாகமும் துணிவும் தொடர் முயற்சியும் இன்றைய கால இளைஞர்களிடம் எளிதாக சென்றடைய வேண்டும். அதற்கு வ.உ சிதம்பரனாரின் நினைவாக கோவை மத்திய சிறையில் செக்கை பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான வ.உ.சி மைதானத்தில் வைக்க வேண்டும். இந்தத் தியாகச் சின்னத்தை இளைஞர்கள் காணும்போது அவர்களுக்கு வ.உ சிதம்பரனாரின் துணிவும் முயற்சியும் தியாகமும் மனதில் உருவாகும் என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...