நீலகிரி மாவட்டத்தில் தொடர் தென்மேற்கு பருவமழை காரணமாக இரண்டாவது முறையாக பைக்காரா அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் அணையில் வினாடிக்கு 1773 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை மிகவும் தாமதமாக துவங்கியது. இருப்பினும் இங்கு கடந்த ஆண்டினை விட 47 சதவீதம் மழை பெய்துள்ளது. இதனால் குடிநீர் மற்றும் மின்சாரத்திற்கு பயன்படும் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக மழை துவங்குவதற்கு முன் 43 அடியாக இருந்த பைக்காரா அணை தொடர் மழை காரணமாக கடந்த மாதம் 97 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மீண்டும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் 110 அடியான பைக்காரர அணை மீண்டும் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1773 கன அடி உபரி நீர் அணையில் இருந்து இன்று முதல் வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மசினகுடி, தெங்குமரஹாடா போன்ற பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.