கோவை : உக்கடம் பகுதியைச் சேர்ந்த நபர் இனி குற்றங்களில் ஈடுபடமாட்டேன் என பிணைய பத்திரம் எழுதிக் கொடுத்த நிலையில், உறுதி மொழியை மீறியதாக சிஆர்பிசி 110 இன் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையில் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை, உணவு பொருட்கள் கடத்தல் போன்ற குற்றங்களை தடுக்க காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறன.
இதில் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மாநகரில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் பிணைய பத்திரம் எழுதி வாங்கி உறுதிமொழியை மீறும் நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இப்படியிருக்க தொடர் குற்ற சம்பவங்கள் மற்றும் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வரும் நபரொருவர் உறுதிமொழியை மீறியதாக வருவாய்துறை அதிகாரியால் கடுங்காவல் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
உக்கடம் பகுதியை சேர்ந்தவர் அபிஹபிப் ரகுமான் (42). இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அதேபோல இவர் மீது இரண்டு முறை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜீலை மாதம் 19ம் தேதி பொள்ளாச்சி வருவாய் துறை அதிகாரி முன்னிலையில் அபிஹபிப் ரகுமானிடம் குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என பிணையப்பத்திரம் எழுதி வாங்கப்பட்டது.
ஆனால் அவர் வாக்குறுதியை மீறி கடந்த மாதம் 22ஆம் தேதி 1150 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முற்ப்பட்டுள்ளார்.
அப்போது தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அபிஹபிப் ரகுமானை கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இப்படியிருக்க உறுதிமொழியை மீறியதாக அபிஹபிப் ரகுமானை 110 சி.ஆர்.பி.சி சட்டத்தின் கீழ் வரும் 2021 ஆம் ஆண்டு ஜீலை 15ம் தேதி வரை சிறையில் அடைக்க வருவாய் துறை அதிகாரி ரவிக்குமார் உத்தரவிட்டார்.
கோவை மாநகரில் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணனின் முயற்சியால் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் இந்த சிறப்பு நடவடிக்கை தற்போது அரசுத் துறையின் மற்ற அதிகாரிகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குற்றங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.