கோவையில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ; தீயணைப்புத்துறையினர் இளைஞரின் உடலை தேடும் முயற்சியில் தீவிரம்

கோவை : ஆலாந்துறை அருகே நொய்யல் ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற இளைஞர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : ஆலாந்துறை அருகே நொய்யல் ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற இளைஞர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கோவை மாநகர காவல் எல்லை மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தையடுத்து விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட குளங்களில் கரைக்கப்பட்டது.

இப்படியிருக்க ஆலாந்துறை அருகே உள்ள இக்கரை போலுவம்பட்டி நொய்யல் ஆற்றில் விராலியூர் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 4 அடி விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

இந்தநிலையில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்த நிலையில் சிலையை கரைக்க சென்ற ராமு என்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் இளைஞரின் பிரேதத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் இரவு என்பதாலும் நீர் வேகமாக செல்வதாலும் இளைஞரின் பிரேதத்தை கண்டுபிடிப்பது சிரமத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து இரவு திரும்பிய தீயணைப்பு துறையினர் இன்று அதிகாலை முதல் மீண்டும் இளைஞரின் உடலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் மழையின் காரணத்தால் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளதால் இளைஞரின் உடலைத் தேடுவது தீயணைப்புத் துறையினருக்கு சவாலாக அமைந்துள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...