கோவை : கோவையில் விநாயகர் சதுர்த்தியையடுத்து இன்று முதற்கட்டமாக இந்து அமைப்புகள் மற்றும் பொது மக்களால் வைக்கப்பட்ட 1519 விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.

நாடு முழுவதும் கடந்த 2 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையடுத்து அனைத்து பகுதிகளிலேயும் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் களிமண் மற்றும் காகித கூல்களால் ஆன விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த சிலைகளை வழக்கம்போல கரைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதில் கோவை மாநகர காவல் எல்லை மற்றும் கோவை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த 1519 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
இதில் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சிங்காநல்லூர் குறிச்சி, குனியமுத்தூர் உள்ளிட்ட மூன்று குளங்களில் இன்று முதற்கட்டமாக 159 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
அதேபோல மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம்,துடியலூர், சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1350 சிலைகள் கரைக்கபட்டது.
அதேபோல மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஐபிஎஸ் தலைமையில் 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் பதட்டமான பகுதியான மேட்டுப்பாளையம் பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ், ரேப்பிட் ஆக்சன் போர்ஸ் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்பு பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த தொடர் பாதுகாப்பினால் கோவை மாவட்டத்தில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற்றது.