பதட்டமான பகுதியாக அறிவிக்கப்பட்ட மேட்டுப்பாளையத்தில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் ; கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றது

கோவை : மேட்டுப்பாளையத்தில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

கோவை : மேட்டுப்பாளையத்தில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் மேற்பார்வையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றது.

இதில் மேட்டுப்பாளையம், சிறுமுகை,காரமடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.



இதையடுத்து விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.



மேலும் இந்த நிகழ்வானது செண்டை மேளங்கள் முழங்க ஆரவாரத்துடன் நடைபெற்றது.



இந்த விசஜர்ன ஊர்வலத்தையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக 1000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.

அதேபோல பதட்டமான பகுதியான மேட்டுப்பாளையம் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற்று சிலைகள் கரைக்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...