கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை ஆலோசனை கூட்டம்

கோவை : கோவை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்மந்தர் சிங் தலைமையில் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கோவையின் மாநகர பகுதிகளைப் போன்றே ஊரக பகுதிகளிலும், தெருவிளக்கு வசதிகள், குடிநீர் தேவைகள், கழிவுநீர் வடிகால் வசதி, சாலை வசதி, கழிப்பறை வசதிகள் என அடிப்படை கட்டமைப்புகளின் நிலைப்பாடு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் அரசின் திட்டங்கள் கோவை மாவட்ட மக்களுக்கு நேரடியாக எந்த வித சிரமமும் இன்றி உரிய நேரத்தில் சென்றடைய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆலோசனை கூட்டத்தினை அடுத்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்மந்தர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தமிழகத்தின் முக்கியமான தொழில் நகரங்களில் கோவை மாவட்டம் ஒன்றாகும். தமிழக அரசு கோவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை கணக்கில் கொண்டும், விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்தகைய வளர்ச்சித்திட்டங்கள் கோவை மாவட்ட மக்களுக்கு நேரடியாக எந்த வித சிரமமும் இன்றி உரிய நேரத்தில் சென்றடைய வழிவகை செய்யவுள்ளதாகவும், மேலும் தற்பொழுது நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை மேற்கொண்டதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்மந்தர் சிங் கூறினார்.



இதனையடுத்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்மந்தர் சிங் வாலாங்குளம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...