திருப்பூர் : திருப்பூரில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்த போலிசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் : திருப்பூரில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்த போலிசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன். திமுகவின் மாணவரணி பொறுப்பில் உள்ள அவர் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். கடந்த 1-ம் தேதி இரவு. அப்பகுதியில் பாலமுருகன் நடந்து சென்ற போது, அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது.
இச்சம்பவம் தொடர்பாக வடக்கு போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் நண்பர் ஒருவரது வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கும்பலைச் சுற்றி வளைத்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், திருப்பூர் சூசையாபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன், ராயபுரம் மிலிட்டரி காலனியை சேர்ந்த நந்தகுமார், தஞ்சாவூர் பட்டுக்கோட்டையை சேர்ந்த முத்துக்குமார், சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்த உதயகுமார் என்பது தெரிந்தது. விக்னேசுக்கும் பாலமுருகனுக்கும் பணம் கொடுத்தல் வாங்கல் பிரச்சினை காரணமாக விக்னேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலமுருகனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பிறகு அவர்கள் கை, கால்களில் அடிபட்டு கட்டு போட்ட நிலையில் மாலை திருப்பூர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.