நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கோவையிலிருந்து நீலகிரி நோக்கி 55 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து நிலை தடுமாறி அருகிலிருந்த பள்ளத்தில் மாேதி நின்றதால் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் சாரல் மழைப்பெய்து வந்தது. இதன் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாகக் காணப்பட்டது. இந்நிலையில் கோவையில் இருந்து இன்று மதியம் மஞ்சூர் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை சுரேஷ் என்பவர் இயக்கி வந்தார். அப்போது மஞ்சூர் சாலையிலிருந்த சேற்றால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்பு சுவர் இல்லா பள்ளத்தில் நிலைதடுமாறி நின்றது. இதனால் பேருந்தில் பயணம் செய்த 55 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இப்பகுதியில் மழைகாலங்களில் சாலை முழுவதும் சேறும் சகதியும் காணப்படுவதாகவும் சாலையின் ஓரங்களில் தடுப்பு சுவர் இல்லாமல் காணப்படுவதால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாக கூறிய அப்பகுதி பொதுமக்கள் சாலையில் தடுப்புச் சுவர்களை ஏற்படுத்தி சாலையில் உள்ள சேற்றினை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.