கோவை : கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள குளத்தில், கடந்த 3 தினங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன.
கோவை : கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள குளத்தில், கடந்த 3 தினங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து இன்று முதற்கட்டமாக இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல இந்த சிலைகள் ஆரவாரத்துடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக வந்து குளகரையோரத்தில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டுக் கரைக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் வரும் பாதைகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதில் தற்போது குனியமுத்தூர் உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள குளத்தில் 28 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இந்த குனியமுத்தூர் குளத்தில் உதவி ஆணையாளர் சந்திரசேகரன் தலைமையிலான நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிலைகளை கரைக்க வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, மாநகராட்சி ஆகியவை சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.