அடுத்த 9 மாதங்களில் கோவை வ.உ.சி விலங்கியல் பூங்கா விரிவுபடுத்தப்படும்; புது விலங்கினங்களை சேர்க்க ஆலோசனை

கோவை : கோவையில் உள்ள வஉசி பூங்கா மிருகக்காட்சிசாலையை அடுத்த 9 மாதங்களுக்குள் விரிவுபடுத்த உள்ளதாக மத்திய மிருகக்காட்சிசாலை ஆணையம் தெரிவித்துள்ளது.


கோவை : கோவையில் உள்ள வஉசி பூங்கா மிருகக்காட்சிசாலையை அடுத்த 9 மாதங்களுக்குள் விரிவுபடுத்த உள்ளதாக மத்திய மிருகக்காட்சிசாலை ஆணையம் தெரிவித்துள்ளது. 

மத்திய மிருகக்காட்சிசாலை ஆணையம் (CZA) கோவையில் உள்ள வஉசி பூங்கா மிருகக்காட்சிசாலையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், விரிக்க பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒரு முறை அறிக்கை அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 29 ஏக்கருக்கு மிருகக்காட்சிசாலையை விரிவுபடுத்துவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிக விரிவான திட்ட அறிக்கையை தயாரித்துள்ளனர். 4.35 ஏக்கர் பரப்பளவு கொண்ட தற்போதைய மிருகக்காட்சிசாலையில் பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றைக் கொண்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு மிருகக்காட்சிசாலையை நடத்துவதற்கு மாநகராட்சியிடம் வழங்கப்பட்ட உரிமத்தை மத்திய மிருகக்காட்சிசாலை ஆணையம் ரத்து செய்தது. அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதற்கு, சிறைபிடிக்கப்பட்ட விலங்குகளின் நல்வாழ்வுக்கான சில தரங்களை பூர்த்தி செய்ய மத்திய மிருகக்காட்சிசாலையின் ஆணைய அறிவுறுத்தல்களின்படி, மிருகக்காட்சிசாலையை புதுப்பிக்க வேண்டும். இதனால் மாநகராட்சி தற்போது கோயம்புத்தூர் மத்திய சிறை வளாகத்தில் உள்ள மொத்தம் 40 ஏக்கரில் 25 ஏக்கரில் மிருகக்காட்சிசாலை அமைக்க கவனம் செலுத்தியுள்ளது. 

அதேபோல 'செம்மொழி பூங்கா'வை உருவாக்க மாநில அரசு 2010ல் நகர மாநகராட்சிக்கு வழங்கியிருந்தது. செம்மொழி பூங்காவில் ஒதுக்கப்பட்ட மொத்த பரப்பளவில், ஆறு ஏக்கர்களை தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் (எஸ்.டி.ஏ.டி) ஒப்படைக்க முந்தைய திட்டம் இருந்த நிலையில் தற்போது இத்திட்டத்தில் சில சிறிய மாற்றங்களைச் செய்ய மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து ஒரு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், வ.உ.சி பூங்காவின் முழு பரப்பளவையும் பயன்படுத்துமாறு தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தரப்பில் கோரப்பட்டுள்ளது, அதேசமயம் செம்மொழி பூங்காவில் ஒதுக்கப்பட்ட பகுதி மிருகக்காட்சிசாலைக்கு பயன்படுத்தப்பட வேண்டும். பின்னர், விலங்குகள், பறவைகள், பாலூட்டிகள் ஆகியன செம்மொழி பூங்கா மற்றும் புதிய இடத்திற்கு நகர்த்தப்படும் எனவும் மேலும் புதிய விலங்குகளும் மிருகக்காட்சிசாலையில் சேர்க்கப்படும் எனவும் தற்போதைய 4.35 ஏக்கர் மிருகக்காட்சிசாலையானது, பொழுதுபோக்கு வசதிகளுடன் புதுப்பிக்கப்படும் என்றார்.

மேலும், அடுத்த 9 மாதங்களுக்குள் டெண்டர் விடப்பட்டு, மிருகக்காட்சிசாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டு, ஒரு வருட காலத்திற்குள் விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...