திருப்பூர் : திருப்பூரில் பசு மாட்டை கடத்தி சென்று வன்புணர்வு செய்த மூன்று வட மாநில இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பெருமாக்கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி. இவருக்கு சொந்தமான பசுமாடு அவ்வப்போது உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இரவு வேளைகளில் நன்றாக இருக்கும் பசுமாடு காலையில் பலவீனமாக இருந்ததை சில நாட்களாக கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு பசுமாட்டை வெளியே கட்டிவிட்டு தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் சப்தம் கேட்டு விழித்த கந்தசாமி வெளியே வந்து பார்த்த போது பசுமாட்டினை காணாமல் தேடியுள்ளார்.
அப்போது அருகில் உள்ள கோழிப்பண்ணை அறையில் இருந்து சப்தம் வரவே, அங்கு சென்று பார்த்த பொழுது பசுமாட்டினை அறையில் வைத்து மூன்று இளைஞர்கள் வன்புணர்வு செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வடமாநில இளைஞர்கள் மூவரைப்பிடித்து கிராமமக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த பல்லடம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் மூவரும் ஒரிசாவை சேர்ந்தவர்கள் என்பதும், அருகில் உள்ள கல்குவாரியில் பணி செய்து வந்ததும், நள்ளிரவு வேளையில் பசு மாட்டினை கடத்திச் சென்று அருகில் உள்ள கோழிப்பண்ணை அறையில் அடைத்து வைத்து மூன்று வடமாநில இளைஞர்களும் தொடர்ந்து வன்புணர்வு சித்திரவதை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மூன்று இளைஞர்களையும் கைது செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.