கோவை : கோவையில் சுண்டப்பாளையம் அருகே பண்ணை வீட்டில் வைத்து முதியவர் ஒருவர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முதியவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை : கோவையில் சுண்டப்பாளையம் அருகே பண்ணை வீட்டில் வைத்து முதியவர் ஒருவர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முதியவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை சுண்டப்பாளையம் பகுதியைச் சுற்றியுள்ள பள்ளிகளில் சமூக செயற்பாட்டாளர்கள் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வில் "குட் டச்" "பேட் டச்" குறித்த தகவல்களை குழந்தைகளுக்கு பரிமாறினர். அப்போது விழிப்புணர்வு பெற்ற 2 சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை சமூக செயற்பாட்டாளர்களிடம் தெரிவித்தனர். இதில் ஒரு சிறுமிக்கு 11வயது, மற்றொரு சிறுமிக்கு 9 வயதாகும்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களும் சமூக செயற்பாட்டாளர்களும், குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து பெருமாள்சாமி என்ற 72 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பண்ணை வீட்டில் வைத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் முதியவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.