கோவை : கோவையில் "சாந்திபெக்ஸ்" என்ற தலைப்பில் மகாத்மா காந்தி 150வது பிறந்தநாளை முன்னிட்டு தபால் கண்காட்சி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுதில் கோபால் ஜாக்ரே தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 5,6,7 தேதிகளில் தபால் தலை கண்காட்சி தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக டெக்னோ பார்க் அரங்கில் நடைபெறும் என முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுதிர் கோபால் ஜாக்ரோ தெரிவித்தார்.
இது குறித்து கூட் ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி "சாந்திபெக்ஸ்" 2019 என்ற தலைப்பில் நடைபெற உள்ளதாக கூறினார். கோவை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் இதில் மாணவர்களுக்கு வினாடி வினா, ஓவிய போட்டி, கடிதம் எழுதுதல், புதிர் விடுவித்தல், தபால் பட்டறை உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் மாணவ, மாணவிகள் மகிழும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளது என தெரிவித்தார். இலவச அனுமதியுடன், காலை 10 மணி முதல் மாலை 7 வரை இந்த கண்காட்சி நடைபெறும் எனவும் இன்றைய தலைமுறையினர் தபால் துறை மற்றும் அதன் செயல்பாடுகள் அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.