திமுக ஆட்சியை இழந்ததற்கு கொங்கு மண்டலமே காரணம் : திமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மகேஷ் பொய்யாமொழி

கோவை : திமுக ஆட்சியை இழந்ததற்கு காரணம் கொங்கு மண்டலம் தான் என்று திமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கோவை : திமுக ஆட்சியை இழந்ததற்கு காரணம் கொங்கு மண்டலம் தான் என்று திமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி பகுதி கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், வடகோவையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசுகையில், திமுக ஆட்சியை இழந்ததற்குக் காரணம் கொங்கு மண்டலம் தான் எனவும் எங்கு தொலைத்தோமோ, அங்கே தான் தேடவேண்டும், உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான், இங்கு ஆரம்பித்துள்ளதாகப் பேசிய அவர், தாய் கழகத்துடன் இணைந்து, உங்கள் கையை பிடித்து நடக்கவே வந்துள்ளேன் என்றார். 

மேலும், இளைஞரணியினர் தாய் கழகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் மூத்தவர்களின் அறிவுரையைப் பெற்றுச் செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். 30 லட்சம் இளைஞர்களை இளைஞரணியில் இணைக்க வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றார். மக்களிடையே கழக செயல்பாடுகள் குறித்து அறிய போஸ்டர்கள் அடிக்கப்பட வேண்டும் எனவும் இளைஞர் அணியினர் சமுதாய பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.

விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ளதால் இன்று முதலே பணியை துவங்க வேண்டும் என்று கூறிய மகேஷ் பொய்யாமொழி, மு.க.ஸ்டாலினை அரியணையில் அமர வைப்பதே அனைவரது ஒரே நோக்கம் என்றார். முன்னதாக ஆலோசனைக் கூட்டத்தில், புதிய இளைஞரணி செயலாளராக பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வது. இளைஞரணி 7 மண்டலமாக பிரிக்கப்பட்டு,கொங்கு மண்டலத்தின் பொறுப்பாளராக பொறுப்பேற்றுள்ள மகேஷ்பொய்யாமொழி எம்எல்ஏவுக்கு பாராட்டுதலை தெரிவித்துக்கொள்வது. மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் உதவியுடன் இளைஞரணிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, பாசறைக் கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, சட்டமன்ற உறுப்பினர் கோ.வி. செழியன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் மணி, நந்தக்குமார், குப்புசாமி, பகுதி கழக செயலாளர் கோவை லோகு, பகுதிகழக பொறுப்பாளர்கள் சேதுராமன், சண்முகசுந்தரம், கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.மா.ச.முருகன், மகுடபதி, தீபா, ராஜராஜேஸ்வரி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...