பாஜகவின் தமிழக தலைவர் யார் என்பதை கட்சியின் தலைமை விரைவில் முடிவு செய்யும் : பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்

திருப்பூர் : பாஜகவின் தமிழக தலைவர் யார் என்பதை பாஜகவின் தலைமை முடிவு செய்யும் என பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

திருப்பூர் : பாஜகவின் தமிழக தலைவர் யார் என்பதை பாஜகவின் தலைமை முடிவு செய்யும் என பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

திருப்பூரில் பாஜகவின் கோட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தொழில் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம், தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார் 



அப்போது அவர் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் பொய்யான குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றன. காஷ்மீரின் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஏன், அதனால் காஷ்மீருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மாவட்டம் தோறும் பாஜக சார்பில் கூட்டங்கள் நடத்த இருப்பதாகவும், காஷ்மீர் விவகாரத்தில் திமுக ஆரம்பத்தில் எதிர்ப்பு நிலைப்பாடு இருந்த நிலையில், பொதுமக்களிடம் திமுகவிற்கு ஆதரவு இல்லாத காரணத்தால் தற்போது ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

அதேபோல், தமிழக பாஜக தலைவர் யார் என்பதை விரைவில் பாஜகவின் தலைமை முடிவு செய்யும் எனவும் பாஜக தலைவர் இல்லாத காரணத்தால் பாஜகவின் செயல்பாடுகளில் எந்தவித சுணக்கமும் ஏற்படாமல் பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...