கோவை : கோவை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விதைப்பந்து வீசும் விழா தொடங்கியது. பள்ளி மாணவிகள் தங்கள் தயாரித்த 10 லட்சம் விதைப்பந்துகளை கல்லூரி மாணவர்களிடம் ஒப்படைத்தனர்.

கடந்த மாதம் பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து 10 லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து, கோவையில் அமைந்துள்ள வனப்பகுதியில் நான்கு குழுக்களாக பிரிந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம், மேட்டுப்பாளையம், பெரியநாய்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் விதைப்பந்துகளை வீச உள்ளனர். மழைக்காலம் என்பதால் நன்கு காய்ந்த விதைப்பந்துகள் முளைக்கும் எனவும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். மேலும், மாணவிகள் தங்கள் தயாரித்த விதைப்பந்துகளை கல்லூரி மாணவர்களிடம் ஒப்படைத்தனர்..

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட வனத்துறை அலுவலர் வெங்கடேஷ், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்த நான்கு யானைகளுக்கு குடற்புழு நோய் தாக்குதல் இருந்ததாகவும், யானை உயிரிழப்பு தடுக்க ஆய்வுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், அப்பகுதியில் இரண்டு பேரை மிதித்துக் கொன்ற காட்டு யானையை கேரளா வனத்திற்குள் விரட்டியதாகவும், இனி அந்த யானையால் பிரச்சனை இருக்காது என்றும் யானைகளை கண்காணிக்க 360டிகிரி சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். சின்னதம்பி, விநாயகன் யானைகளைப் பிடித்ததால் தற்போது பயிர் சேதம் குறைந்துள்ளது. செங்கல் சூளைகள் மணல் எடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். கோவை மாங்கரை எல்லை வாயிலாக கேரளாவிற்கு எந்தவிதமான மணல், ஜல்லி கடத்தப்படவில்லை என்றார்.
அதே போல, யானைகள் மீதான தாக்குதலை தடுக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். யானை தாக்கி உயிரிழந்த இரண்டு பேரும் மது அருந்தியிருந்ததாகவும், யானை செல்லும் பாதையில் நடமாடியதால் இதுபோன்ற விபரீதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.