மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வல பாதுகாப்பு பணிகள் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜீ பெரியய்யா ஆய்வு

கோவை : மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தையொட்டி பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்த மேற்கு மண்டல ஐ.ஜீ பெரியய்யா, நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் 1000க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடத்தபட உள்ளதாகத் தெரிவித்தார்.


கோவை : மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தையொட்டி பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்த மேற்கு மண்டல ஐ.ஜீ பெரியய்யா, நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் 1000க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடத்தபட உள்ளதாகத் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் வழிபாட்டு பின் அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லபட்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது. இதனையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறை சார்பில் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேட்டுப்பாளையம் பதற்றமான பகுதி என்பதாலும் ஏற்கனவே கோவை மாவட்டத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாலும் காவல்துறை தனி கவனம் செலுத்தி வருகிறது. 



இந்நிலையில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தலைமையில் பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் - உதகை முக்கிய சாலைகளிலும், பவானி ஆற்றில் சிலை கரைக்கப்பட உள்ள பகுதிகளிலும் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

மேலும், சிலைகள் கரைக்கப்பட உள்ள பகுதிகளில், தடுப்பு வேலிகள் அமைத்து சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, உயரமான கட்டிடங்களில் இருந்து ஊர்வலத்தின் போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல, மேட்டுப்பாளையம் சீ.டி.சி டெப்போவில் இருந்து பவானி ஆற்றங்கரை வரை ஊர்வலம் செல்லும் போது 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...