மேட்டுப்பாளையத்தில் குடியிருப்புக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை: கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை : மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்புக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை : மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்புக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை அருகே உள்ள கெம்மாரபாளையம் பனப்பாளையம் புதூர், கண்டியூர், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியாக உள்ள இந்த கிராமத்தில் கால்நடை வளர்ப்பு என்பது பிரதானமாக இருந்து வரும் நிலையில், கால்நடைகளை சிறுத்தைகள் வேட்டையாடுவது என்பது தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு இந்த கிராம பகுதிகளில் நுழைந்த சிறுத்தை ஒன்று, மேட்டூர், பணப்பாளையம், வெள்ளியங்காடு போன்ற பகுதிகளில் பொதுமக்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு என கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனையடுத்து அதனைப் பிடிக்க வனத்துறை கூண்டு வைத்தனர். இருப்பினும் சிறுத்தை அதில் சிக்கி தப்பிச் சென்றது. அதன் பின்னர் சிறுத்தை நடமாட்டம் குறைந்த நிலையில் தற்போது அந்த சிறுத்தை மீண்டும் தனது வேட்டையைத் துவக்கியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.



இந்நிலையில் இன்று அதிகாலை பனப்பாளையம் புதூர் கிராமத்தில் நுழைந்த சிறுத்தை, சர்தார்பாஷா என்பவருடைய வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகளை கடித்து குதறியது. நாய்கள் குறைப்பதை கண்டு எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த சத்தார்பாஷா ஆடுகள் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து நாய்கள் சிறுத்தையை துரத்திச் சென்றதையும் அவர் பார்த்துள்ளார். 

இதுகுறித்து காரமடை வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுத்தையின் கால் தடங்களையும் இறந்த ஆடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் இது குறித்து விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர் . இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை பொதுமக்களை தாக்குவதற்கு முன் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...