நடுரோட்டில் வைத்து தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை : திருப்பூரில் பயங்கரம்..!

திருப்பூர் : திருப்பூரில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த தி.மு.க. பிரமுகரை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருப்பூர் : திருப்பூரில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த தி.மு.க. பிரமுகரை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். தி.மு.க. மாணவரணி அமைப்பு நிர்வாகியான இவர், கல்லூரி சாலையில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் உட்பட பலருக்கும் வட்டிக்கு பணம் அளித்து வந்துள்ளார். இந்த நிலையில், கல்லூரி சாலையில் ஐயப்பன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, இருசக்கர வாகனத்தில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில், நிலைதடுமாறி சாலையில் விழுந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதைத்தொடர்ந்து, கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல், அவிநாசி சாலை வழியாக தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 



இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகர காவல் துணை ஆணையர் உமா தலைமையிலான வடக்கு போலீஸார், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் பரபரப்பான சாலைப் பகுதியில் நடைபெற்றுள்ள இந்த கொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...