மேட்டுப்பாளையம் பகுதியில் 550 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு

கோவை : மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 550 விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

கோவை : மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 550 விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கண்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பெரியநாய்க்கன்பாளையம் உட்கோட்டத்தில் மட்டும் சுமார் 550 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து இன்று வழிபாடு நடத்தப்பட்டது.



சுமார் 3 அடி முதல் 11 அடி வரையிலான களிமண்ணால் ஆன சிலைகள் 550 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் நகரம் முதல் கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் பஞ்சமுக விநாயகர், அனுமந்த விநாயகர், இசை விநாயகர் என பல பல்வேறு முகங்களில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் அருள்பாவிக்கும் சிலைகள் பிரதஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதிகாலையில் மகா கணபதி யாகங்கள் நடத்தி விநாயகர் சதுர்த்தி துவங்கப்பட்டது. விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள், அவில் போன்றவை இறைவனுக்கு படைத்து வழிபாடு நடத்தினர். மேலும், விநாயகர் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், பொதுமக்கள் காலை முதலே காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான விநாயகர் சதுர்த்தி விசஜர்ன ஊர்வலம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது குறிபிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...