கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

கோவை : கோவையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக வெளியான எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரசித்தி பெற்ற முக்கிய கோவில்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக வெளியான எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரசித்தி பெற்ற முக்கிய கோவில்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவானது சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய கோவில்களுக்கும் உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, கோவையில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிசத், பாரத்சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.



இப்படி கட்சியினர் மற்றும் பொது மக்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, ஈச்சனாரி விநாயகர் கோவில், புலியகுளம் முந்தி விநாயகர் கோவில், மருதமலை கோவில், கோனியம்மன் கோவில் போன்ற சிறப்பு வாய்ந்த கோவில்களுக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கோவையில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் அனைத்துப் பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் கோவையில் தீவிரவாத தாக்குதலுக்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் தரப்பில் இன்று மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...