கோவை : கோவை - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கோவை : கோவை - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

6 மணிக்கு ஈச்சனாரி விநாயகர் அலங்கார தீபாராதனை ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் வழிபாடு காத்திருந்து வருகின்றனர்.
கோவை - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலில், கணபதி ஹோமம், அபிசேகம், அலங்கார தீபாராதனை, உச்சிகால பூஜை, மகா அன்னதானம் மற்றும் தங்கரதம் வழிபாடு என பல்வேறு நிகழ்ச்சிகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 200 வருடம் பழமையான கோவில் என்பதால் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஈச்சனாரி விநாயகர் கோவில், புலியகுளம் முந்தி விநாயகர் கோவில், மருதமலை, கோனியம்மன் திருத்தலங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.