ஈஷாவில் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இன்னர் இன்ஜினியரிங் யோகா வகுப்பு

கோவை : கோவை ஈஷா யோகா மையத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு பிரத்யேகமாக ’இன்னர் இன்ஜினியரிங்’ என்ற யோகா வகுப்பு ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெற்றது.

கோவை : கோவை ஈஷா யோகா மையத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு பிரத்யேகமாக ’இன்னர் இன்ஜினியரிங்’ என்ற யோகா வகுப்பு ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெற்றது.



இந்திய ராணுவத்தின் பல்வேறு பிராந்திய தலைமையகங்களில் இருந்து மேஜர் ஜெனரல், லெப்டினெண்ட் ஜெனரல், பிரிகேடியர், கர்னல் ஆகிய உயர் பதவிகளில் இருக்கும் உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் என மொத்தம் 55 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு ‘ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா’ என்ற தொன்மையான மற்றும் சக்திவாய்ந்த தியானப் பயிற்சிக்கு தீட்சை அளிக்கப்பட்டது. மேலும், ஈஷா உப-யோகா பயிற்சியும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா வித்யா பள்ளிக்கு சென்று அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ராணுவ அதிகாரிகள் கலந்துரையாடினர். மேலும், புகழ்பெற்ற 112 அடி ஆதியோகியையும் தரிசனம் செய்தனர்.

இவ்வகுப்பில் கற்றுக்கொடுக்கப்பட்ட ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ பயிற்சியை தினமும் செய்து வந்தால், மன அழுத்தம் குறைதல், ஆரோக்கியம் மேம்படுதல், கட்டாய பழக்கவழக்கங்களில் இருந்து விடுப்பட்டு விழிப்புணர்வு அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு பலன்களை பெற முடியும். 

இந்த பிரத்யேக பயிற்சி வகுப்பு தொடர்பாக சத்குரு வெளியிட்ட செய்தியில், “ இந்த உள்நிலை ஆரோக்கியத்துக்கான இந்த தொழில்நுட்பத்தை ராணுவ அதிகாரிகள் முழுமையாக பயன்படுத்தி தங்களை உறுதிப்படுத்தி கொண்டு தேசத்துக்கு சிறப்பாக சேவை ஆற்றுவார்கள் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த 5 நாள் வகுப்பின் அனுபவங்கள் குறித்து ராணுவ அதிகாரிகள் பகிர்ந்துகொள்ளும் போது, “இவ்வகுப்பு தங்களுக்கு தொழில்ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,“ என்று தெரிவித்தனர். 2018-ம் ஆண்டு லே மற்றும் சியாச்சினுக்கும் 2019-ம் ஆண்டு அந்தமான் நிக்கோபார் தீவுக்கும் சென்ற சத்குரு ராணுவ அதிகாரிகளுடன் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...