மத்திய அரசின் திட்டங்கள் மக்களை வஞ்சிக்கும் வகையில் இருக்கக்கூடாது : பிரேமலதா விஜயகாந்த்

திருப்பூர் : மத்திய அரசின் திட்டங்கள் மக்களை வஞ்சிக்கும் வகையில் இருக்கக்கூடாது என திருப்பூரில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


திருப்பூர் : மத்திய அரசின் திட்டங்கள் மக்களை வஞ்சிக்கும் வகையில் இருக்கக்கூடாது என திருப்பூரில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செப்டம்பர் 15 அன்று தே.மு.தி.க. சார்பில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திருப்பூர் காங்கயம் சாலையில் நடைபெற்றது . இதில், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு கால்கோள் நாட்டினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பர் 15 திருப்பூரில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டம் திருப்புமுனை பொதுக்கூட்டமாக அமையும். முதல்வர் வெளிநாடு பயணம் வெற்றி பெற தே.மு.தி.க. சார்பில் வாழ்த்தி வழி அனுப்பியதோடு, தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்து வருகிறது. பாதுகாப்பிற்காக மத்திய அரசின் இந்த நடவடிக்கையை காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். 

நாட்டின் பொருளாதார சரிவு வேதனை அளிக்கிறது. மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக இருந்தாலும், அது மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துவிடக் கூடாது. இது குறித்து பிரதமரிடம் நேரடியாகவே சில கோரிக்கைகள் வைத்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி பிரச்சனைகளில் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவோம். மேலும், தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் இதுபோன்ற உயர் பதவியை பெறுவது வரவேற்கத்தக்கது, என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...