திருப்பூர் : திருப்பூரில் கல்லூரி பேருந்து மோதி கீழே விழுந்த கர்ப்பிணி பெண் நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் : திருப்பூரில் கல்லூரி பேருந்து மோதி கீழே விழுந்த கர்ப்பிணி பெண் நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருப்பூர் - தாராபுரம் சாலை ரேணுகா நகர் பகுதியில் குடியிருந்து வரும் கௌசல்யா - ரமேஷ் தம்பதியர் டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். கௌசல்யா மூன்று மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில், பணி முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில், குமரன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தனியார் கல்லூரி பேருந்து மோதி கீழே விழுந்தார். இதில், கௌசல்யா நூலிழையில் உயிர் தப்பினார். கை மற்றும் இடுப்பு பகுதிகளில் லேசான காயத்துடன் தப்பினார். இதையடுத்து, கௌசல்யா திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் வடக்கு போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.