நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை : 68 இடங்களில் ஏ.டி.எம்.கள் திறப்பு

நீலகிரி : தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓர கடைகளில் இன்று முதல் பிளாஸ்டிக் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 68 வாட்டர் ஏ.டி.எம்.களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.


நீலகிரி : தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓர கடைகளில் இன்று முதல் பிளாஸ்டிக் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 68 வாட்டர் ஏ.டி.எம்.களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கப்படும் குடிநீர், குளிர்பான பாட்டில்கள் பயன்பாட்டிற்குப் பின் வீசப்படுவதால் ஏற்படும் தண்ணீர் மாசுபாடு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, செப்டம்பர் 1 முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் குழு அமைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் தடை குறித்து விளக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 



இந்த நிலையில், நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. இதனைத் தொடர்ந்து, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வாட்டர் ஏ.டி.எம்.மை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார். மேலும், நீர் நிலைகளைக் காப்பாற்ற உயர்நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் உறுதியாக பின்பற்றவுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைப்பு கொடுக்க அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், 5 ரூபாய்க்கு 1 லிட்டரும், 2 ரூபாய்க்கு 400 மில்லி லிட்டரும் தண்ணீர் வழங்கும்படி இந்த வாட்டர் ஏ.டி.எம். வடிமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...