பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து, கோவையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை : பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து, கோவையில் கனரா வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து, கோவையில் கனரா வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் சங்கம் கூட்டமைப்பு சார்பாக கோவை செஞ்சிலுவை சங்கம் அருகேயுள்ள உள்ள கனரா வங்கியின் முன்னோடி கிளை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டது.வங்கிகள் இணைப்பால் வங்கி வாடிக்கையாளர்கள் சேவை கடுமையாக பாதிக்கப்படும் எனவும், வங்கிகளை இணைப்பதால் வங்கி கிளைகள் மூடப்படும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

மேலும், நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்ற இதுபோன்ற சூழ்நிலையில் வங்கிகள் இணைப்பு தேவையற்றது எனவும், பொதுமக்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்தனர். எனவே, வங்கிகள் இணைப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும், அக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...