கோவை : கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் முதியவர் உள்பட மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு துவங்கியதில் இருந்தே பெண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு கேள்வி குறியாகவே உள்ளது. இதில், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, துடியலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, சிறுமிகளிடம் சில்மிஷம் செய்யும் நபர்கள் மீது போலீசாரும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

அதேபோல, சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து தனிக் கவனமும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பெண் குழந்தைகளுக்கு எதிரான சீண்டல்கள் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 3 நபர்கள் மீது வெவ்வேறு காவல்நிலையங்களில் வந்த புகாரின் பேரில், போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், டவுன்ஹால் பகுதியில் வசித்து வரும் செந்தில்பிரபு (34) என்பவர் நேற்று மதியம் தனது வீடு அருகே உள்ள 6 வயது சிறுமிக்கு மிட்டாய் கொடுப்பதாக தனியாக வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து, உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேபோல, சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட இருகூர் பகுதியில் நேற்று பள்ளியில் இருந்து வந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாகிய நபரை, போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும், ஒத்தக்கால்மண்டபம் அருகே வசித்து வரும் பழனிச்சாமி (60) என்ற முதியவர் 3 வயது பெண் குழந்தையிடம் பிஸ்கட் கொடுப்பதாக தனியாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தியதாக பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான 3 புகார்கள் எழுந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.