ரூ. 37 ஆயிரத்தை தவறவிட்ட வயது முதிர்ந்த பயணியிடம் திருப்பி ஒப்படைத்த போக்குவரத்து ஊழியர்களுக்கு பாராட்டு

கோவை : பேருந்தில் வயது முதிர்ந்த பயணி தவறவிட்ட ரூ. 37 ஆயிரத்தை நேர்மையுடன் திரும்ப ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநருக்கு போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் பாராட்டி பரிசு வழங்கினார்.

கோவை : பேருந்தில் வயது முதிர்ந்த பயணி தவறவிட்ட ரூ. 37 ஆயிரத்தை நேர்மையுடன் திரும்ப ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநருக்கு போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் பாராட்டி பரிசு வழங்கினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை, பவானி கிளை நகரப்‌ பேருந்து எண்‌ TN 33 N 2990 வழித்தடம்‌ 2 Bயில்‌ நேற்று முன்தினம் பவானியில் இருந்து வள்ளிபுரத்தாம்‌ பாளையம்‌ செல்லும்‌ பேருந்தில்‌ சென்ற வயது முதிர்ந்த பயணி ரூ. 37,000-ஐ தவறவிட்டுச் சென்று விட்டார். இதை கண்டு, பேருந்து நடத்துநர்‌ ஆறுமுகம்‌, ஒட்டுநர்‌ சீனிவாசன்‌ 9924 ஆகிய இருவரும்‌ பேருந்தில்‌ கண்டெடுத்து கிளையில்‌ ஒப்படைத்தனர். அவர்களது இந்த நேர்மையைப் பாராட்டி போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர்‌, அவர்களை‌ நேரில்‌ அழைத்து சால்வை அணிவித்தும்‌, பரிசுப்‌ பொருட்கள்‌ வழங்கியும் பாராட்டியுள்ளார்‌. மேலும்,‌ தலைமை நிதி அலுவலர்‌, பொதுமேலாளர்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ உடனிருந்து பாராட்டு தெரிவித்துள்ளனர்‌.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...