பரிசுகளையும், செய்திகளையும் பரிமாற்றம் செய்து கொள்ள புதிய ஹக்ஸ் செயலி அறிமுகம்

கோவை : நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிசுகளையும், செய்திகளையும் பரிமாற்றம் செய்து கொள்ள புதிய ஹக்ஸ் (hugz ) செயலி கோவையில் துவக்கப்பட்டுள்ளது.

கோவை : நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிசுகளையும், செய்திகளையும் பரிமாற்றம் செய்து கொள்ள புதிய ஹக்ஸ் (hugz ) செயலி கோவையில் துவக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹக்ஸ் இணை நிறுவனர் சுப்ரஜ் கூறியதாவது :- இந்த யோசனை நாங்கள் ஹப்–பிளையில் பணியாற்றிய போது வந்தது. நாங்கள் வேலை செய்யும்போது, அதன் தொடர்ச்சியாக வேலை முடிந்த பிறகும் வரும். அமெரிக்காவிலிருந்து வரும் நள்ளிரவு அழைப்பு, பணியை முடிக்க வார இறுதியிலும் பரபரப்பான வேலை போன்றவைகளை பாராட்டவும், நன்றி செலுத்தவும், பரிசளிக்கவும் வழிகள் இல்லை. பரிசு கூப்பன்களை மட்டுமே கொடுக்க முடிந்தது. ஆனால், ஐஸ்க்ரீம் போன்ற உடனடி பரிசுகளை வழங்க இயலவில்லை. எனவே, இப்போது, ஹக்ஸ் இந்த பயன்பாட்டிற்கு உதவுகிறது. சிறிய கூடுதல் பணிக்கும் உடனடியாக பரிசளிக்கவும், அவர்களுக்கு வசதியான விரும்பும் இடத்தில் ஐஸ்க்ரீம் போன்றவைகளை வாங்கிக் கொள்ளவும் இது உதவுகிறது.

எனவே, ஒரு அன்பான செயலியாக ஹஜ்ஸ் செயல்படும். தனிப்பட்ட முறையில் ஒரு செயலியில் நன்றி கூறவும், வருத்தம் தெரிவிக்கவும், இழப்பை சொல்லவும் முடியும். அதோடு பரிசளிக்கவும் இயலும். இந்த நிறுவனம், தனது வருவாயில் ஒரு சதவீதத்தை உடல் நலம் குன்றிய குழந்தைகளுக்கு பரிசளிக்கவும் முடிவு செய்துள்ளது. இது ஒரு உதவி மட்டுமல்ல, இன்னும் பல சூழ்நிலைகளில் பலருக்கு உதவி செய்யவும், வாழ்த்துக்களை தெரிவிக்கவும், சிறப்பான நாளில் வாழ்த்துக்களை தெரிவிக்கவும் இது உதவும். குழந்தைகளின் பிறந்தநாளில் வாழ்த்தோடு, பரிசுகளையும், பரிசு கூப்பன்களையும் அனுப்ப முடியும். பணமாக கொடுக்க விரும்பாதவர்கள், ஒரு அர்த்தமுள்ள பரிசை வழங்க முடியும். வணிக முறையிலான நிறுவனங்கள், கோவையில் தங்களது தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு பிறந்த நாள், தீபாவளி, புத்தாண்டு போன்ற சமயங்களில்

பரிசளிக்க ஹக்ஸ் (hugz) உதவுகிறது.

மனிதவள மேம்பாடு, நிர்வாகத்தினர் தொழிலாளர், பணியாளர்களுக்கு தரும் பரிசுகளை எஸ்எம்எஸ் வாயிலாக தெரிவிக்கலாம். அடுத்த மாதத்தில் இந்த செயலியை பெங்களூருவிலும், 2020 ம் ஆண்டு அரையாண்டிற்கும் நம் நாட்டின் முக்கிய நகரங்களிலும் இதை அறிமுகம் செய்கிறோம். பி.வி.ஆர். சினிமாவுடன் இணைந்து, சினிமா டிக்கெட்டுகளையும் பரிசளிக்க முடிவு செய்துள்ளோம். நாடு முழுவதும் உள்ள பிவிஆர் சினிமா தியேட்டர்களில் இந்த பரிசு டிக்கெட்டுகளை பயன்படுத்த முடியும். இது போன்று, காபிடே, மெக்டொனால்டு, கேஎப்சி, பிஸ்ஸா ஹட் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளோம். தேசிய அளவில் விரைவாக இடம்பிடிக்க இவை பெரிதும் உதவும், என்றார்.

ஒரு ஹக் அனுப்புவது எவ்வாறு?

அன்பளிப்பை அனுப்பும் நாளை தேர்வு செய்யுங்கள் அதோடு நீங்கள் தெரிவிக்கும் வாழ்த்து/ பாராட்டுக்களை இணையுங்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களை தேர்வு செய்யலாம். இந்த பரிசை அருகில் உள்ள ஹக்ஸ் பங்குதாரர் விநியோகஸ்தரிடம் பெற்றுக் கொள்ளலாம்.

பரிசு பெறுவது எப்படி... அன்பளிப்பை பெறுங்கள் உங்களுக்கு கிடைத்த லிங்க் இணைப்பை க்ளிக் செய்யுங்கள். எங்கு பரிசை பெறலாம் என்பதை பட்டியலில் அறியுங்கள் அந்த கடைக்கு சென்று, பெற்றுள்ள ஹக் பரிசை காண்பித்து, பிரத்யோக குறியீட்டை அளித்து பெறலாம். வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களுக்கும் பாராட்டுக்களை தெரிவியுங்கள். அன்பு என்பது, அளவற்றது. இந்த செயலியை ஆன்ட்ராய்ட் பிளே ஸ்டோரிலும், ஐஓஎஸ் ஆப் ஸ்டோரிலும் பெறலாம். மேலும், விபரங்களை www.hugz.app என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம். பி.எஸ்.ஜி. மேலாண்மை நிறுவனம், அறிவுசார் பங்குதாரராக செயல்படுகிறது. மார்க்கெட்டிங் பிரிவு மாணவர்கள், இதில் பங்கேற்று பல்வேறு சமூக ஊடகங்களில் பரவச் செய்து, அதன் செயல்பாடுகளை அடுத்த இரண்டு மாதங்களுக்கு தர உள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...