கோவை : மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள குறும்பட போட்டி நல்ல ஒரு வாய்ப்பாக அமையும் என பா.ஜ.க. மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வரும் செப்டம்பர் மாதம் பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, கல்லூரி மாணவர்களுக்கான குறும்பட போட்டிகளை கோவை மக்கள் சேவை மையம் நடத்த உள்ளது. இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு காந்திபுரம் பகுதியில் உள்ள மக்கள் சேவை மையத்தில் நடைபெற்றது.
அப்போது, தமிழக பா.ஜ.க. மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கூறியதாவது :- தமிழகத்தில் இருந்து பல்வேறு கல்லூரிகள் இதில் பங்கேற்க உள்ளனர். 250-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் எடுக்கும் குறும்படங்கள் பெறப்பட்டு, முதல் சுற்றுக்கு பின் தேர்வுக்கு பின் தகுதியான படங்களை திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகையும், இயக்குநருமான மதுவந்தி அருண் ஆகியோர் தேர்வு செய்வார்கள். பாரத பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் வாயிலாக, மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற மையக் கருத்தாகக் கொண்டு குறும்படங்கள் எடுக்கப்பட வேண்டும் என கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு சுற்றறிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.
குறும்படங்கள் 2 நிமிடம் முதல் அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். ஒரு அணியில் மூன்று மாணவர்கள் முதல் 20 பேர் வரை பங்கு கொள்ளலாம். மேலும், வரும் 10-ம் தேதிக்குள் மக்கள் சேவை மையத்தில் சமர்பிக்கப்பட வேண்டும். மாணவர்களின் படைப்பு திறனை வெளிக்கொண்டு வரவும், மத்திய அரசின் செயல்பாடுகள் அறிந்து கொள்ள இது வாய்ப்பாக அமையும். இதில், சிறந்த குறும்படத்திற்கு முதல் பரிசாக 50,000, இரண்டாம் பரிசு 25,000, மூன்றாம் பரிசு 10,000 என வழங்கப்படும். மேலும், சிறப்பு தேர்வு அணிக்கு 5,000, சிறந்த இயக்கத்திற்கு தனி நபருக்கு 5,000, சிறந்த ஒளிப்பதிவிற்கு 5,000, சிறந்த திரைக்கதைக்கு 5,000, சிறந்த நடிகருக்கு 5,000 என மொத்தம் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பரிசுகளும், போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பரிசளிப்பு விழா வரும் 27-ம் தேதி சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம். பள்ளி கலை அரங்கில் நடைபெறும். மேலும், இது குறித்த விவரங்கள் அறிந்து கொள்ள 86755-55666 தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம், என அவர் அப்போது தெரிவித்தார்.