கோவையில் கத்தி, அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி கும்பல் : வைரலாகும் புகைப்படம்..!

கோவை : சரவணம்பட்டி அருகே ரவுடி கும்பல் ஒன்று கத்தி, அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் புகைப்படமாக வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : சரவணம்பட்டி அருகே ரவுடி கும்பல் ஒன்று கத்தி, அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் புகைப்படமாக வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ரவுடிகள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, போலீசார் இதுபோன்ற பயங்கர ஆயுதங்களால் கேக் வெட்டி கொண்டாடி புகைப்படங்களை வெளியிடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இப்படி, இதுவரை தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.



இந்த சம்பவங்களில் பல பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு மண்டல காவல் எல்லைக்குட்பட்ட சேலம் மாவட்டத்தில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி ஜீசஸ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இதேபோல, சென்னையில் ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகள் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கோவையில் மேலும் ஒரு ரவுடி கும்பல் அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் சரவணம்பட்டி பகுதியில் உள்ள சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கோவையில் முதல் முறையாக இது போன்ற புகைப்படம் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...