கோவை : கோவையில் விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய் வாங்கி ரூ.1.46 கோடி மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விற்பனை செய்து தருவதாக கூறி விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட கொப்பரை தேங்காய்க்கான விலையை தராமல் ரூ.1.46 கோடி மோசடி செய்த வழக்கில் இடைதரகர்கள் 5 பேர் கைது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் பகுதியைச் சேர்ந்த 22 தென்னை விவசாயிகளிடம் இருந்து கொப்பரையை, அதேப்பகுதியை சேர்ந்த பிரேமானந்த் என்பவர் மூலம் நெகமம் பகுதியைச் சேர்ந்த 6 இடைத்தரகர்கள் வாங்கியுள்ளனர். ஹைதராபாத் மாநிலத்தில் விற்பனை செய்து தருவதாகக் கூறி ரூ. 3 கோடியே 68 லட்சம் மதிப்பிலான 16 டன் கொண்ட ஒரு லோடு என 12 லோடு கொப்பரையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வாங்கியுள்ளனர். அதில், 2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான கொப்பரைக்கான தொகையை கொடுத்த நிலையில், மீதம் உள்ள ரூ. 1 கோடியே 46 லட்சம் தராமல் மோசடி செய்யும் நோக்கில் இடைதரகர்கள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால், கோவை மாவட்ட குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் பிரேமானந்த் புகார் அளித்தார். வழக்கு கொடுத்து ஓராண்டு மேலாகியும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்ற கிளையை அணுகினர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கிளை, மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மேற்கொள்ளும் விசாரணையை கண்காணிக்கவும், மோசடி செய்யப்பட்ட கொப்பரையை முழுமையாக பறிமுதல் செய்வதை உறுதி செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் கைதாவதையும் உறுதி செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரின் உத்தரவின் பேரில், கொப்பரை மோசடியில் ஈடுபட்ட நெகமம் செட்டிபுதூரைச் சேர்ந்த சிவக்குமார், ராதாகிருஷ்ணன், மனோஜ்குமார், சக்திவடிவேல், வேணுகோபால் ஆகிய 5 இடைதரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட முக்கிய நபரான இடைதரகர் நாராயணசாமி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.