கோவை : கரும்பர்தம்பட்டி அருகே மேம்பால பணிகளின் போது, ஊழியர்களின் அஜாக்கிதையால் உயிரிழந்த பெண்ணிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு இரவு நேரத்தில் பணி முடித்து தொழிலாளர்கள் தடுப்பு கம்பிகளை சர்வீஸ் சாலையில் வைத்து விட்டு சென்றதால் நேற்று முன்தினம் லாரி மோதியதில் மோகனப்பிரியா என்ற பெண்மணி உயிரிழந்தார். இந்த உயிரிழப்புக்கு தொழிலாளர்களின் அஜாக்கிரதையும், சர்வீஸ் சாலை குறுக்கப்பட்டதும் தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மற்ற பகுதிகளில் 60 மீட்டர் அகலம் உள்ள சாலை, கருமத்தம்பட்டியில் 40 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்து வரும் சூழலில், உடனடியாக சர்வீஸ் சாலையை அகலப்படுத்த வேண்டும் பழுதான மேம்பாலத்தை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே, சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று கருமத்தம்பட்டியில் நடைபெற்றது. இதில், கருமத்தம்பட்டி பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கருமத்தம்பட்டி பகுதியில் சாலை விபத்து அதிகரித்து வருகிறது. சாலை விரிவாக்கம் செய்தால் மட்டுமே விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க முடியும். தமிழக அரசு தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இதற்கு தீர்வு காணப்படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.