நீலகிரி : குன்னூர் அருகே நெடுகல்கொம்பை பழங்குடியினரை மூளைச் சலவை செய்ததாக கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் டேனிஷை செப்.,12 வரை காவலில் எடுத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதியளித்தது.

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் டெனிஷ் என்கிற கிருஷ்ணன் (31). இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாவோயிஸ்ட் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். கேரளாவில் இவரைக் கைது செய்த போலீசார், திருச்சூர் சிறையில் அடைத்தது. அதைத் தொடர்ந்து, விசாரணையில் நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை அருகே உள்ள நெடுகல்கொம்பை ஆதிவாசி கிராமத்துக்கு 2016-ல் ஊடுருவியதில் இவருக்குத் தொடர்பு உண்டு என காவல்துறை உறுதிப்படுத்தியது.
பழங்குடியினர் இடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, அவர்களை மூளைச் சலவை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, டெனிஸை கைது செய்த கொலக்கொம்பை போலீசார் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்துக்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர். கேரள மாநில போலீசார், கேரள தீவிரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் நீலகிரி போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்புடன் டெனீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, டெனீஷை அடுத்த மாதம் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பி. வடமலை உத்தரவிட்டார்.
இந்த நிலையில், டெனீஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகேட்டு கொலக்கொம்பை காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். உணவு இடைவெளியின் போது, டெனீஷை போலீஸார் நீதிமன்றத்திலிருந்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது, டெனீஷ் ‘இன்குலாப் ஜிந்தாபாத், மாவோயிஸம் ஜிந்தாபாத், தொழிலாளர்கள் போராட்டங்கள் வெல்லட்டும், இந்துத்துவா மற்றும் கார்பரேட்டிஸம் ஒழியட்டும், ஆசாத் காஷ்மீர் ஜிந்தாபாத்’ என கோஷங்கள் எழுப்பினார். நீதிமன்ற வளாகத்திலேயே டெனீஷ் கோஷங்கள் எழுப்பியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மாலை டேனிசை போலீஸ் காவலில் எடுப்பதற்காக குன்னூர் டி.எஸ்.பி. குமார் நீதிபதி வடமலை முன்பு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார். அதில், கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி கேரளா அகழி போலிசாரிடம் நெடுகல்கம்பை பகுதிக்கு சென்று ஆதிவாசி மக்களிடம் மாவோயிஸ்ட் பிரசாரம் செய்ததாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே, மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அதன் பிறகு, நீதிபதி வடமலை மாவோயிஸ்ட் டேனிசிடம் போலீஸ் காவலில் செல்ல ஆட்சேபனை உள்ளதா என்று கேட்டார்.
அப்போது, பேசிய டேனிஸ், “போலீஸ் காவலில் செல்ல விருப்பம் இல்லை. மேலும், 50-க்கும் மேற்பட்ட ஆந்திரா, கேரளா போலீசார் என்னை விசாரணை செய்தனர். நான் எங்கும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை. 2016ம் ஆண்டு கேரளாவில் ஜெயிலில் இருந்தேன். அப்போது, எல்லாம் இந்த வழக்கு குறித்து எந்த விசாரணையும் நடக்கவில்லை. நான் எல்லா போலீஸ் அதிகாரிகளின் விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளித்துள்ளேன். என் மீது 10 வழக்குகள் உள்ளன. எல்லா வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. என்னை வெளியே விடக் கூடாது என்பதற்காகவே பொய் வழக்கு போட்டுள்ளனர்," என்றார்.
அதன் பிறகு, மாவோயிஸ்ட் சார்பில் மதுரை வக்கீல் ராஜா என்பவர் வாதாடினார். ஊட்டி அருகே உள்ள நெடுகல்கம்பை கிராமத்திற்கு மூன்று பெண்கள், நான்கு ஆண்கள் வந்துள்ளனர். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் டேனிஸ் பெயர் இல்லை. தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே போலீஸ் காவலில் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. இவர் போனதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த வழக்கோடு 10 வழக்குகள் உள்ளன. இதுவரை 35 தினங்கள் போலீஸ் காவல் இருந்துள்ளார். அப்போதெல்லாம், இவர்கள் விசாரிக்கவில்லை. இவரை வெளியே விடக்கூடாது என்பதற்காகவே பொய் வழக்கு போட்டுள்ளனர். ஆகவே, போலீஸ் காவலில் எடுக்க அனுமதிக்க கூடாது, என்றார்.
இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, கைதான மாவோயிஸ்ட் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.