கோவை : பில்லூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கான முன்பதிவு திங்கள் முதல் துவக்க உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. மலைவாழ் மக்களை கொண்டு நடத்தப்படும் இந்த சூழல் சுற்றுலாவில் முன்பதிவு செய்து சுற்றுலா பயணிகள் அனைவரும் பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியில் நடைபெறும் படகு சவாரியில் பயணம் செய்து இயற்கையை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்ற மாதம் பெய்த பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சூழல் சுற்றுலா ரத்து செய்யப்பட்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக பில்லூர் அணையானது தனது முழுகொள்ளளவை எட்டியதால், அணையின் நான்கு மதகுகள் வழியே உபரிநீரானது 58,000 கன அடிவரை வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி பில்லூர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் நடைபெற்று வந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா கடந்த 5ஆம் தேதி முதல் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டது. மேலும், அதற்கான முன்பதிவுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், பருவ மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்து, அணைக்கான நீர்வரத்து தற்போது 3,000 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளதால், கடந்த மூன்று வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா அடுத்த வாரம் முதல் மீண்டும் துவங்க உள்ளதாக காரமடை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கான முன்பதிவு வரும் திங்கட்கிழமை முதல் இணையதளம் மூலம் முன்பதிவு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பூச்சிமரத்தூர் பகுதியில் சுற்றுலாவுக்காக உள்ள வனத்துறை தங்கும் விடுதியும் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் மிகுந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் நடத்தப்படும் இந்த சூழல் சுற்றுலாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.