கோவை : தொழில்முனைவோர்களின் அமைப்பின் கோவை கிளை சார்பில் தொழில் முனைவோருக்கான கற்றல் நிகழ்ச்சி கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவை : தொழில்முனைவோர்களின் அமைப்பின் கோவை கிளை சார்பில் தொழில் முனைவோருக்கான கற்றல் நிகழ்ச்சி கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கற்றல் நிகழ்ச்சியில் ரேடிக்கல், சிங்குலாரிட்டி பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவு மற்றும் திறந்தநிலை புத்தாக்கத் துறையின் இணை நிறுவனர் பாஸ்கல் பினெட் தலைமை வகித்து தொழில் முனைவோர்களிடையே சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, பாஸ்கல் பினெட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : தொழில்முனைவோர்களின் அமைப்பு 58 நாடுகளில் 188 கிளை அமைவிடங்களைக் கொண்டு இயங்கும் ஒரு உலகளாவிய அமைப்பாகும். இதன் தலைமையகம் அமெரிக்காவில் உள்ளது. தொழில்முனைவோர்கள் அமைப்பின் கோவை கிளை தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு அங்கமாகும். ஜவுளி உற்பத்தி, ரீடெய்ல், ஆடைகள் தயாரிப்பு, ஆபரணங்கள், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், சொத்து மேம்பாடு, உடல்நல பராமரிப்பு, கல்வி போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த 70 பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது, ஐ.டி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளும் பல்வேறு புதிய நுட்பங்களை புகுத்தி அனைத்து துறைகளில் புதிய மாறுதல்களை கொண்டுவருகின்றன. எனவே, இந்த புதிய தொழில்நுட்பங்களை நாமும் பயன்படுத்தி தொழில்களை புதுமையான முறையிலும், லாபகரமான முறையில் செய்ய வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் வரும்பொழுது வேலையின்மை ஏற்படுவது தற்காலிகமானதுதான். ஆனால், அது வேறு உருவத்தில் மற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும். புதிய தொழில்நுட்பங்கள் வரும்பொழுது அத்தகைய சவால்களை எதிர்கொண்டு தொழில்களை நடத்த தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர்க்குக்கான கற்றல் நிகழ்ச்சியில் அளிக்கப்பட்டது, என்றார்.
இந்த பேட்டியின்போது, தொழில்முனைவோர் அமைப்பின் தலைவர் ரஜினிகாந்த், நிர்வாகிகள் வாஜி நாத், சுராஜ் சாந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.